Home நிகழ்வுகள் தமிழகம் தமிழகத்தில் 1,018 ஊர்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன

தமிழகத்தில் 1,018 ஊர்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன

329
0
தமிழகத்தில் 1,018 ஊர்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன

தமிழகத்தில் 1,018 ஊர்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை தமிழில் சில ஊர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு உச்சரிப்புகள் இருந்துவந்தன.

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 1,018 ஊர்களின் ஆங்கில பெயர்களையும் தமிழிலேயே உச்சரிக்கும் வண்ணம் மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

2018-2019 ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், “தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும்.

இதனை செயல்படுத்த 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்” என்று அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக முதலில் 1,018 ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போலவே ஆங்கிலத்திலும் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உதாரணமாக செங்கல்பட்டு chengalpet என்பதிலிருந்து chengalpattu எனவும், பூவிருந்தவல்லி poonamallee என்பதிலிருந்து poovirundavalli எனவும், ஆரணி arni என்பதிலிருந்து aarani எனவும் மாற்றப்பட்டுள்ளன.

மேலும் சென்னையின் பல பகுதிகளில், திருவள்ளூர், சீர்காழி, கரூர், விழுப்புரம், வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை கிருஷ்ணகிரி, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

பெயர் உச்சரிப்பு மாற்றப்பட்டுள்ள சில ஊர்களின் பட்டியல் :

1. திண்டுக்கல் – Dindigal – Thindukkal
2. நாகர்கோயில் – Nagercoil – Nagerkovil
3. விழுப்புரம் – Vilupuram – Vizhuppuram
4. மதுரை – Madurai – Mathurai
5. திருவரங்கம் – Srirangam – Thiruvarangam
6. வேலூர் – Vellore – Veeloor
7. கரூர் – Karur – Karoor
8. தண்டையார்பேட்டை – Tondiyarpet – Thandaiyaarpettai
9. வ.உ.சி நகர் – V.O.C Nagar – VA.OO.SI Nagar
10. எழும்பூர் – Egmore – Ezhumboor
11. சிவகங்கை – Sivaganga – Sivagangai
12. தருமபுரி – Dharmapuri – Tharumapuri
13. பூவிருந்தவல்லி – Poonamallee – Poovirunthavalli
14. தாராபுரம் வடக்கு – Dharapuram North – Tharaapuram Vadakku
15. தூத்துக்குடி – Tuticorin – Thooththukkudi
16. திருவைகுண்டம் – Srivaikundam – Thiruvaikundam
17. செங்கல்பட்டு – Chengalpet – Chengalpattu
18. கோயம்புத்தூர் – Coimbatore – Koyampuththoor
19. ஆரணி – Arni – Aarani
20. சீர்காழி – Sirkali – Seerkaazhi
21. திருவில்லிபுத்தூர் – Srivilliputtur – Thiruvillipuththur

 

Previous articleஅசாமில் சிறுத்தை கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளது
Next articleவேஷ்டி சட்டையில் கலக்கும் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here