Home நிகழ்வுகள் தமிழகம் ‘ஆரோக்கியம்’ திட்டம் ‘கபசுரக் குடிநீர்’ மருந்து பொட்டலங்கள் விநியோகம்: முதல்வர்

‘ஆரோக்கியம்’ திட்டம் ‘கபசுரக் குடிநீர்’ மருந்து பொட்டலங்கள் விநியோகம்: முதல்வர்

306
0
ஆரோக்கியம் கபசுரக் குடிநீர்

சென்னை: ‘ஆரோக்கியம்’ திட்டத்தை துவங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘நிலவேம்பு கசாயம்’ மற்றும் ‘கபசுரக் குடிநீர்’ பொடிகள் அடங்கிய பொட்டலங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

பிறகு “ ஒரு இலட்சம் அளவிலான ‘கபசுரக் குடிநீர்’ பொட்டலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் (CONTAINMENT ZONES) வசிக்கும் சென்னை வாசிகளுக்கு ‘ஆரோக்கியம்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும்,” என தெரிவித்தார்

கொரோனா பரவல் தீவிரம் அடைவது போல் இருந்ததால் , மாநில அரசு 11 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழுவை அமைத்தது,  இதில் அரசு மற்றும் அரசு சாரா அமைப்பினர் மற்றும் பாரம்பரிய மருத்துவர்களும் அடங்குவர். அவர்களிடத்தில் கொரோனா தடுக்க மாற்று வழிகளை கண்டுபிடித்து பரிந்துரை செய்யுமாறு கூறியது.

இதனை தொடர்ந்து அந்த குழுவிற்கு ஆயுஷ்(AYUSH) அமைச்சகம் சித்தா , ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரை செய்யுமாறு அறிவுறுத்தியதை அடுத்து அக்குழு, ‘கபசுரக் குடிநீர்’ கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர மக்களுக்கு கொடுக்கலாம் என மாநில அரசுக்கு அறிவுறுத்தியது.

வல்லுநர் குழுவின் அறிவுறுத்தலை கவனத்தில் ஏற்று, முதலமைச்சர் இந்த புதிய ‘கபசுரக் குடிநீர்’ வழங்கும் திட்டத்தினை மக்களிடத்தில் அறிமுகம் செய்து வைத்தார், என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘கபசுரக் குடிநீர்’ எனும் சித்த வைத்திய மருந்து கோவிட்-19 நோயை முழுவதுமாக குணமாக்காவிட்டாலும் மக்களின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தி மக்களை ஆரோக்கியமாக வைக்கும், இதன் மூலம் மக்களுக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்பாற்றலை மேம்படுத்தி பரவலை தடுக்கலாம் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here