காதலன் வீட்டுமுன் காதலி தர்ணா: கண்ணீர் மல்க கதறல்!
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஆயிஷாவும் (21), குமணன்சாவடியைச் சேர்ந்த வினோத்குமாரும் (24) என்பவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
முதலில் நட்பு, பின்பு காதல் என இருவரும் காதலிக்கத் துவங்கியுள்ளனர். பின்பு நெருங்கி பழகி உள்ளனர். இதில் ஆயிஷா இருமுறை கர்ப்பமடைந்து கருவைக் கலைத்துள்ளார்.
வினோத்தை திருமணம் செய்துகொள்ள, ஆயிஷா கட்டாயப்படுத்தி உள்ளார். வினோத் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் இரண்டு மாதங்களுக்கு முன் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வினோத்தை பிடித்து விசாரித்துள்ளனர்.
காவல்நிலையத்தில் ஆயிசாவைத் திருமணம் செய்துகொள்வதாக வினோத் கூறியுள்ளார். மேலும், வினோத்தின் பெற்றோரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனால் போலீசார் வினோத்தை விட்டுவிட்டனர். மீண்டும் ஆயிஷா சில நாட்கள் கழித்து வினோத்தை தொடர்புகொண்டபோது, திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என அடம்பிடித்துள்ளார்.
இதனால் வினோத் வீட்டுவாசலில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் ஆயிஷா, கண்ணீர் மல்க வினோத் எப்படி எல்லாம் ஏமாற்றினார் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வினோத் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அங்கிருந்து கலைந்து சென்றார்.