Home Latest News Tamil காதலின் நிலையும்… ஹார்மோன்களின் வேலையும்…

காதலின் நிலையும்… ஹார்மோன்களின் வேலையும்…

807
0
காதலின் நிலையும்

காதலின் நிலையும்… ஹார்மோன்களின் வேலையும்…

வாழ்நாளில் ஒரு முறையாவது, கீழே உள்ள மூன்று நிலைகளைக் கடக்காதவர்கள் இருக்கவே முடியாது.

இளமைப்பருவதில் பூக்கும் காதல், இறுதி மூச்சுவரை நம்மனதின் ஏதாவது ஒரு மூலையில் இருந்துகொண்டே இருக்கும்.

பசியின்மை, தூக்கமின்மை, மறதி, பட்டாம்பூச்சி பறக்குதல் மற்றும் படபடப்பு ஏற்படுதல் இதற்கெல்லாம் உடலில் சுரக்கும் சில ஹார்மோன்கள்தான் காரணம்.

காதலுக்கு மூன்று நிலைகள் உள்ளன. இதில் நீங்கள் எந்தநிலை எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

முதல்நிலை – காமம் (Lust):

நாம், பருவநிலையை அடையும் பொழுதோ அல்லது அதற்கு முன்னரோ, எதிர்பாலினத்தைக்கண்டு ஏற்படுவதே மோகம் அல்லது காமம். இதில், அவர்களின் தோற்றமும் செயலும் அடங்காது.

இதற்கு காரணம், இரண்டு ஹார்மோன்கள். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் (Estrogen) ஹார்மோனும் செய்யும் வேலையே அது.

இந்த ஹார்மோன்கள்தான், உடல் உறுப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது. விந்தணு உற்பத்தியையும் அண்டப்பையையும் தூண்டி, உடலில் பலமாற்றங்களை ஏற்படுத்தும்.

முதல்நிலைக் காதல், கல்யாணம்வரை கூடச்சென்றதுண்டு. ஆர்வக்கோளாரில், மோகத்தை மட்டும் அனுபவித்துவிட்டு பிரிந்துபோன காதலே அதிகம்.

இரண்டாம் நிலை – ஈர்ப்பு  (Attraction):

எதிர்பாலினத்தின் தோற்றம், செயல், பேச்சு மற்றும் நடவடிக்கைகளைப் பார்த்து ஏற்படும். இது, இரண்டாம் நிலையைச் சேர்ந்தது.

இவர்களுக்குப் பசியின்மை, தூக்கமின்மை, மறதி மற்றும் படபடப்பு ஏற்படும். இதற்கு காரணம், அட்ரினலின் (Adrenaline) என்னும் ஹார்மோன்.

இவர்கள், காதலியையோ அல்லது காதலனையோ  நினைக்கும்போது மகிழ்ச்சியாகவும், ஒருவித காதல் மோகத்திலேயே இருப்பார்கள்.

அடிக்கடி சந்திக்க சொல்லும். தனிமையில் சந்திக்கச் சொல்லும். காதலி அல்லது காதலன் அருகில் இருந்தால் ஒரு இனம்புரியாத இன்பம் ஏற்படும். அதற்கு காரணம், டோபோமைன் (Dopamine) என்னும் ஹார்மோன்.

இந்த ஹார்மோன்தான் காமத்தின் உச்சநிலையை அடைய உதவும். சுயஇன்பம் காணும்போது, இறுதியாக ஏற்படும் இன்பம் டோபோமைன் சுரப்பதே காரணம்.

கனவில், நம் நினத்தவர்களுடன் நினைத்த விதமாக இருப்பது. அதுபோன்ற  கனவை வரவழைப்பது சோரடோனின் (Serotonin) எனும் ஹார்மோன்.

உங்களுக்குபிடித்தவர் நயன்தாராவோ அல்லது சாய்பல்லவியோ யாராக இருந்தாலும், நடுநிசியில் உங்கள் மண்டைக்குள் கனவுக்குதிரையை ஓடவிடுவது சொரடோனின் செய்யும் வேலை.

மூன்றாம் நிலை – பிணைப்பு (Attachment):

இது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் ஒரு ஒருங்கிணைப்பு அல்லது பிணைப்பு எனக்கூறலாம்.

திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ, உடலால் ஏற்படும் நீங்காப் பிணைப்பு. ஒன்றாகவே வாழ்க்கை நடத்துவது. இந்த உறவுக்குக் காரணம், ஆக்ஷிடோசின் (Oxytocin) ஹார்மோன் .

குழந்தை பிறக்கும் சமயத்திலும் ஆக்ஷிடோசின் சுரக்கிறது. அதனால்தான் தாய்க்கும் சேய்க்கும் அப்படி ஒரு பிணைப்பு உண்டாகிறது. எனவே, இதை தொட்டில் ஹார்மோன் எனவும் செல்லமாக அழைப்பார்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி. எனக்கு நீ உனக்கு நான். இதுபோன்ற நீண்ட வருட  காதலுக்கு காரணம், வசோப்ரெஸ்ஸின் (Vasopressin)  ஹார்மோன்.

வசோப்ரெஸ்ஸின் செய்யும் வேலையால்தான், எவ்வளவு சண்டைகள் வந்தாலும் உடனே இணைந்துவிடுவார்கள். நீ இல்லாமல் நானில்லை என்ற நிலையை உருவாக்குவதும் இந்த ஹார்மோன்தான்.

காதலின் மூன்று நிலைகளும், மூன்று நிலைகளில் சுரக்கும், 7 வகை ஹார்மோன்களைப் பற்றி வேறேதும் சந்தேகமிருந்தால் கமெண்டில் கூறவும்… சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும்.

இதில் நீங்கள் எந்தநிலை, உங்களுக்கு என்ன ஹார்மோன் அடிக்கடி சுரக்கிறது என்று தெரிந்துவிட்டது எனில் கமெண்டில் கூறவும்….

Previous articleரியல் கௌசல்யா, திலீப்குமார்: கனா கதாப்பாத்திரம்!
Next articleMovie Review Adanga Maru – அடங்கமறு திரைவிமர்சனம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here