Home நிகழ்வுகள் தமிழகம் அரசியலில் போனியாகாத கமல்; ஆரம்பமே சறுக்கல்!

அரசியலில் போனியாகாத கமல்; ஆரம்பமே சறுக்கல்!

352
0
அரசியலில் போனியாகாத கமல்

அரசியலில் போனியாகாத கமல்; ஆரம்பமே சறுக்கல்!

நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற காலம் தற்பொழுது மலையேறிவிட்டது என்பதை உணர்த்துகிறது சமீபத்திய நிகழ்வுகள்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார். ஆனால் அவரால் இறுதிவரை போராட முடியவில்லை. வந்த வேகத்திலேயே உடல்நலம் குன்றி படுத்துவிட்டார்.

சரத்குமார், கூட்டணி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார். ரஜினி இன்று வரை மக்களை குழப்பிக்கொண்டே உள்ளார்.

நவரச நாயகன் கார்த்திக், டி.ராஜேந்தர் இப்படி பல நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல் துவங்கினார். இது கட்சிப் பெயர் தானா? என்றே பலருக்கும் சந்தேகமே வந்தது.

பாஜகவுடனான பேச்சுவார்த்தை தோல்வி. காங்கிரசுடன் கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி. திமுக கூட்டணி தோல்வி.

கமலை ஆதரிக்கவோ, அவரை வளர்த்து விடவோ எந்தக் கட்சிகளும் தயாராக இல்லை. தமிழகத்தை அடுத்து வழிநடத்த தலைவர்கள் யாரும் இல்லை என நினைத்து கமல் கட்சியை துவங்கிவிட்டார்.

தனக்கு தலைவராகத் தகுதி உள்ளதா? என்பது கமலுக்கே குழப்பமாகிவிட்டது. இனி அவர் கரை சேருவாரா? எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here