Home நிகழ்வுகள் தமிழகம் பண்ணைக்குள் படமெடுத்த 15 அடி நீள பாம்பு பதறிய மக்கள், விரைந்த வனத்துறை அதிகாரிகள்: கோவை

பண்ணைக்குள் படமெடுத்த 15 அடி நீள பாம்பு பதறிய மக்கள், விரைந்த வனத்துறை அதிகாரிகள்: கோவை

பண்ணைக்குள்

கோவை: பாம்பு பிடிப்பவர்களின் உதவியுடன் வனத்துறை அதிகாரிகள் 15 அடி நீள இராஜ நாகத்தை சனிக்கிழமை நரசிபுரம் பண்ணைக்குள் இருந்து மீட்டனர் மற்றும் அதனை சிறுவானி காட்டு பகுதிக்கு சென்று விட்டனர்.

பண்ணையில் பாம்பு பிடிக்க வல்லுநர்களுடன் வந்த அதிகாரிகள்

காட்டுபகுதிக்கு அருகே இருக்கும் பண்ணையில் பாம்பு இருக்கும் செய்தியை கேட்ட அதிகாரிகள், பாம்பு பிடிப்பதில் வல்லுநர்கள் உதவியுடன் வந்து அதனை பிடித்தனர்.

அந்த இடத்திற்கு இரண்டு முறை வந்த பெண் இராஜநாகம்

அதிகாரிகள் இது குறித்து தெரிவிக்கும் பொழுது அந்த பெண் பாம்பு அந்த இடத்திற்கு இரண்டு முறை வந்துள்ளதாகவும், அது தற்போது வைதேகி அருவி இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

“மீண்டும் இங்கு வர வாய்ப்பிருப்பதாக அங்கு இருப்பவர்கள் பயந்ததால், நாங்கள் அதை பிடித்து வேறு காட்டு பகுதியில் தற்போது விட்டுள்ளோம்”, என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Previous articleதுடியலூர் காவல் நிலையத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா: கோவை
Next articleசன் டிவியில் விஸ்வாசம்: தமிழகத்தில் 5 ஆவது இடத்தில் டிரெண்டிங்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here