Home நிகழ்வுகள் தமிழகம் நாளை முதல் கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது.

நாளை முதல் கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது.

294
0
நாளை முதல் கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது

நாளை முதல் கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது என்பதை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். சென்னையில் கோயம்பேடு வணிக வளாகம் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி வருகிறது.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று பதிவான 527 கொரோனா தொற்றுகளில் சென்னையில் மட்டுமே 266 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை கோயம்பேடு வணிக வளாகத்துடன் தொடர்புடையவை.

காய்கறிகள், பூக்கள் மற்றும் பழங்களுக்கான நாட்டின் மிகப்பெரிய வணிக வளாகமாக கோயம்பேடு சந்தை தற்போது சென்னையில் ஒரு ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிய கோவிட் -19 வழக்குகளில் பெரும்பாலானவை சென்னையில் உள்ள கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையுடன் தொடர்புடையவை என்று மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளை முதல் கோயம்பேடு வணிக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டுகிறது. கடந்த வாரம், இரண்டு வணிகர்களுக்கு சந்தை வளாகத்தில் கோவிட் -19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது சந்தையில் ஒரு நடமாடும் சோதனை பிரிவு நிறுவப்பட்டிருந்தது. மேலும் அனைத்து வணிகர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களை சோதித்துப் பார்ப்பதற்கு உருவாக்கப்பட்டது.

இதில் முடுவுகள் வெளிவர துவங்கியதும் சென்னை, கடலூர், அரியலூர், சிவகங்கை, பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியானது.

சந்தை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நாளை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்படுகிறது.

மே 7-முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசையில் இருந்து காய்கறிகள் விற்கப்படும். மேலும் தற்காலிக சந்தையாக மாற்றப்பட்டுள்ள மாதவரம் பஸ் முனையத்திலிருந்து பழங்கள் மற்றும் பூக்கள் விற்கப்படும்.

கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்களை மொத்தம் 7,500 பேர் அடையாளம் காணப்பட்டு, விவரங்கள் அந்த அந்த மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Previous articleசமூகப்பரவலின் வாசலில் தலைநகரம் சென்னை
Next article5/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here