புதுடெல்லி: ஊரடங்கு நாடெங்கும் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு நாடுமுழுவதுமான 170 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முக்கிய பெருநகரங்கள் உட்பட 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்
முக்கிய நகரங்களாகிய புதுடெல்லி, மும்பை, பெங்களூரூ, சென்னை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய பெரு நகரங்களும் இதில் அடக்கம்.
இதில் தமிழ்நாடு 22 மாவட்டங்களுடன் முதல் இடம் உள்ளது அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் மராட்டியம் முறையே 11 மாவட்டங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளன.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு ஹாட்ஸ்பாட் எனப்படுவது சிகப்பு மண்டலம் எனவும் அது ஒரு மாநிலத்தின் அல்லது நாட்டின் கொரோனா பாதிப்பில் 80 விழுக்காட்டை கொண்டிருக்கும், அது ஒரு நகரமாகவோ அல்லது ஒரு மாவட்டமாகவோ இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர கொரோனாவல் அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நான்கு நாட்களுக்குள் பாதிப்பு இரட்டிப்பாக வாய்ப்புள்ள பகுதிகளையும் இந்த பிரிவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள்
- சென்னை
- திருச்சிராப்பள்ளி
- கோயம்புத்தூர்
- ஈரோடு
- திருநெல்வேலி
- திண்டுக்கல்
- விழுப்புரம்
- நாமக்கல்
- தேனி
- செங்கல்பட்டு
- திருப்பூர்
- வேலூர்
- மதுரை
- தூத்துக்குடி
- கரூர்
- விருதுநகர்
- கன்னியாக்குமாரி
- கடலூர்
- திருவள்ளூர்
- திருவாரூர்
- சேலம்
- நாகப்பட்டிணம்
இவ்வாறு சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து 28 நாட்கள் எந்த புதிய பாதிப்புகளும் வரவில்லை என்றால் கொரோனா நீங்கிய பகுதிகளாக பிறகு அறிவிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.