நாகப்பட்டிணம்: தான் செல்லாத இடத்திற்கெல்லாம் தான் சென்றதாக காட்டுவதாகவும் இதனால் தனக்கும் தனது மனைவிக்கும் பிரச்சனை வருகிறது எனக் கூறி கூகுள் நிறுவனத்தின் மீது நாகப்பட்டிணம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
கூகுள் வரைபட காலக்கோட்டில்(Google Map Timeline) தான் செல்லாத இடத்திற்கெல்லாம் தான் சென்றது போல் கூகுள் காட்குகிறது
என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளால் கனவன் மனைவி உறவுல் விரிசல்
தனது தொலைபேசியில் தான் செல்லாத இடத்திற்கெல்லாம் சென்றுள்ளதாக காட்டியுள்ள கூகுள் வரைபடத்தை பார்த்த தனது மனைவி தன்னை சந்தேகிப்பதாகவும், இதனால் தனது மனைவிக்கும் தனக்கும் பிரச்சனை ஏற்படுபதாகவும் புகார் கொடுத்தவர் மேலும் தெரிவித்தார்.
இந்த புகாரை கொடுத்தவர் ஆர். சந்திரசேகரன் எனவும், இவர் மயிலாடுதுறையில் உள்ள லால் பகதூர் நகரில் வசிப்பவர் எனவும் தெரிகிறது. இந்த நபர் செல்லும் இடத்தை எல்லாம் இவரது
மனைவி கூகுள் வரைபடம் மூலம் கண்கானித்து வந்துள்ளார் என்ற நிலையில் இந்த புகாரை இவர் பதிவு செய்துள்ளார்.
காவல்துறை புகாரை ஏற்றது
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட மயிலாடுதுறை காவல் துறை ஆய்வாளர் கே. சிங்காரவேலு இந்த புகாரை ஏற்றுக்கொண்டு, தாங்கள் விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார்.
புகார் கொடுத்த ஆர். சந்திரசேகரன் உள்ளூரில் ஃபேன்ஸி கடை நடத்திவருபவர் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர் எனவும் தெரிகிறது.