Home சிறப்பு கட்டுரை நெல் ஜெயராமன் இல்லையேல், தமிழன் கதி?

நெல் ஜெயராமன் இல்லையேல், தமிழன் கதி?

853
0
நெல் ஜெயராமன் செய்த மகத்தான தொண்டுதாது வருட பஞ்சம் இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்

நெல் ஜெயராமன் இல்லையேல், தமிழன் கதி? தாது வருட பஞ்சம் பற்றி தெரியுமா? ஜெயராமன் செய்த மகத்தான தொண்டு!

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். ஆனால் இந்தியாவில் விவசாயம் பாதுகாக்கப்பட்டுள்ளதா? என்றால் இல்லை. டெல்லியில் சமீபத்தில் நடந்த இந்திய விவசாயிகளின் ஊர்வலமே அதற்குச் சான்று.

தாது வருட பஞ்சம்

உலகின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. யானை வைத்துப் போர் அடித்தவன் தமிழன். 1876-78-ல் தஞ்சை மக்களேகூட சோற்றுக்கு கையேந்தும் நிலை வந்தது.

தெனிந்தியாவில் ஆரம்பித்த தாது வருடப் பஞ்சம், வட இந்தியா வரை தலைவிரித்து ஆடியது. பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில். இப்பஞ்சத்தில் மாண்டவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 1 கோடி மக்கள்.

காரணம், மழை இல்லை என்பது ஒரு புறம். பஞ்சத்தையும் பொருட்படுத்தாமல் பிரிட்டிஸ் அரசு, நெல் மணிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது. இதனால், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.

விதைக்க வைத்திருந்த நெல்லை சமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான் தமிழன். எறும்பு வலைகளை வெட்டி, அதில் இருந்த நெல் மணிகளை உண்டவர்களும் உண்டு.

மலைமருந்தனின் கும்மிப்பாட்டே அதற்கு சான்று.

வீட்டினில் தான்யமும் இல்லாமல் ஒன்றை
விற்கவும் கையில் இல்லாமல் கடன்
கேட்ட இடத்தில் கிடைக்காமல் சிலர்
கெஞ்சி இரக்கிறார் பாருங்கடி

எறும்பு வலைகளை வெட்டி அதனில்
இருக்கும் தானியம் தான் எடுத்து
முறத்தால் கொழித்துக் குத்திச் சமைத்து
உண்ணுகிறார் சிலர் பாருங்கடி

குடிக்கத் தண்ணீரும் இல்லாமல் பணம்
கொண்டு திரிந்தாலும் கிட்டாமல்
இடிக்குப் பயந்த பாம்புகள் போலே
ஏங்குகிறார் சிலர் கேளுங்கடி

அடுத்த வருடம் மழை வந்தாலும், விதைக்க நெல் இல்லை. பஞ்சத்திற்கு மேல் பஞ்சம். ஒரு அரசு முறையாக விவசாயத்தை பாதுகாக்கவில்லை எனில், பஞ்சத்தில் அடிபட்டு மாள்வது உறுதி.

ஜெயராமன் செய்த மகத்தான தொண்டு

அப்போது புரியும், நெல் ஜெயராமன் செய்த மகத்தான தொண்டு. அவர் மீட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் ஏராளம். கடைக்கோடி விவசாயியை தேடிச்சந்தித்துப் பல நெல் மணி ரகங்கள் அழிந்துபோகாமல் மீட்டெடுத்தார்.

அவர் அப்படி செய்யவில்லையெனில், இன்று பாதிக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் மணிகள் காணாமலே போயிருக்கும். மீண்டும் ஒரு பஞ்சம் வந்தால், மரபணு மாற்றப்பட்ட பயிரை நம்பி மாள்வது உறுதி.

நெல் மணிகளுக்காக அயலவர்களிடம் கையேந்தும் நிலை உருவாகும். இப்பொழுதும் முறையாக சேமிக்கும் திட்டம் இல்லை. விவசாயிகள் மட்டுமே, தனிப்பட்ட முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வருகின்றனர்.

அரசு பெரும்பாலும் பாரம்பரிய நெல் உற்பத்தியை ஊக்குவிக்கவில்லை. குறைந்த நாட்களில் அறுவடை செய்யும் அயல்நாட்டு நெல் ரகங்களே பெரும்பாலும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு விவசாயியும் நெல் ஜெயராமனாக மாறினால் மட்டுமே உணவிற்காக அடிமையாவதை தடுக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here