Home நிகழ்வுகள் தமிழகம் ஆடியோவுக்குபின் வீடியோ: அந்த நபரை அதிரவைத்த நிர்மலா தேவி!

ஆடியோவுக்குபின் வீடியோ: அந்த நபரை அதிரவைத்த நிர்மலா தேவி!

0
1308
ஆடியோவுக்குபின் வீடியோ
கோப்பு படம்

ஆடியோவுக்குபின் வீடியோ: அந்த நபரை அதிரவைத்த நிர்மலா தேவி!

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்து, உயர் அதிகாரிகளுக்கு விருந்து படைத்த விவகாரத்தில் ஆசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

நீண்ட நாட்கள் ஆகியும் இவருக்கு ஜாமீன் கிடைத்தபாடில்லை. வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சம்பந்தப்பட்டவர்கள் பேச்சைக்கேட்டு வாயை மூடிக்கொண்டே இருந்தாராம். ஆனாலும் இவரை வெளியில் விடுவதாய் இல்லை.

இந்நிலையில் கேர்ட்டுக்கு அழைத்துச் செல்லும்போது, வக்கீல் மூலம் நைசாகப் பேசி பத்திரிகையாளர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டார்.

பத்திரிக்கையாளர்களிடம் சில வார்த்தைகள் தான் பேசினார். அதிலும் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. இந்த வீடியோவைக் கண்ட அந்த நபர் மிரண்டுவிட்டாராம்.

இனியும் அடைத்துவைத்தால் மானம் கப்பலேறிவிடும் என்பதற்காக தற்பொழுது மருத்துவமனைக்குச் சென்றுவர அனுமதிகிடைத்துள்ளதாம்.

இதற்குமுன் உடல் குறைபாட்டைக்கூறி ஜாமீன் கேட்டபோது கிடைக்கவில்லை. மீடியா முன் லேசாக வாயைத் திறந்தவுடன் மருத்துவமனைக்கு செல்ல இருமுறை அனுமதி கிடைத்துவிட்டது.

ஜெயிலில் இருக்கும்போது வக்கீலை சந்தித்து நிறைய பேசி உள்ளார். ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் அடுத்தடுத்த ஆதாரத்தை வெளியே விட்டுவிடலாம் போன்ற பேச்சுக்கள் இடம்பெற்றதாம்.

“ஆடியோ வெளியானதுக்கே வெளியில் வர முடியவில்லை. வீடியோ ஏதும் வெளியில் வந்தால் என்ன கதியோ? மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்புலத்தில், வேறு ஏதோ மர்மங்கள் உள்ளதாக” சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here