Home நிகழ்வுகள் தமிழகம் நில சுரங்கத்தில் உள்ள அனல் மின்நிலையத்தில் புதன் கிழமை வெடிவிபத்து 6 பேர் பலி: ...

நில சுரங்கத்தில் உள்ள அனல் மின்நிலையத்தில் புதன் கிழமை வெடிவிபத்து 6 பேர் பலி: நெய்வேலி

அனல் மின்நிலையத்தில்

சென்னை: நெய்வேலி நில சுரங்கத்தில் உள்ள அனல் மின்நிலையத்தில் புதன் கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலி மற்றும் 17 பேர் காயம் அடைந்தனர்.

அனைத்து உதவிகளையும் வழங்க தயார்: அமித் ஷா

பா.ஜ.க தலைவர் அமித் ஷா, எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு நெய்வேலி நிலசுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து சம்பந்தமாக அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என தெரிவித்தார்.

“காயம்பட்டவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என அமித் ஷா மேலும் தெரிவித்திருந்தார்.

வேதனைப்படுவதாக இரயில்வே அமைச்சர் தெரிவிப்பு

இந்த சம்பவம் குறித்து இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ,வெடிவிபத்து சம்பவம் குறித்து தான் மிகவும் வேதனைப்படுவதாக தெரிவித்தார்.

அவர் ”அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக கடவுளிடம் வேண்டி கொள்கிறேன், என் எண்ணங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பற்றியே உள்ளது,” என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here