நான் ஆர்எஸ்எஸ்-யைச் சேர்ந்தவன்! உண்மையை உடைத்த பாண்டே
ரங்கராஜ் பாண்டே தந்தி டி.வி.யில் இருந்து விலகியபின், தன்னுடைய யூடியூப் வலைத்தளத்தில் அவ்வப்போது அரசியல் குறித்த நிகழ்வுகளை தெரிவித்துவருகிறார்.
நேற்று, சுதேசி விழிப்புணர்வு மாநாட்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மேடையில் பேசினார்.
சுதேசி என்பது இந்துத்துவா கருத்தியல் கொண்ட சங்கப் பரிவாரின் பொருளாதாரப் பிரிவாகும். இதுவும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.யைச் சேர்ந்த இயக்கமே.
அந்த மேடையில் பாண்டே பேசியதாவது, தான் ஆர்.எஸ்.எஸ்-சின் பொருளாதாரப் பிரிவில் பேச உள்ளேன். இனி என்னை மோடியின் ஆள் என முத்திரை குத்திவிடுவர்.
ஏற்கனவே, நான் மோடியால் நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்ட் என முத்திரை குத்தி வதந்திகளை சமூகவலைதளங்களில் பரப்பினர்.
தற்பொழுது இந்த மேடையில் தோன்றியதால் இன்னும் அழுத்தமாக நான் ஆர்.எஸ்.எஸ்.யைச் சேர்ந்தவன் என்று கூறுவார்கள்.
சுதேசி, ஆர்.எஸ்.எஸ் தலைவராலோ அல்லது மோடியாலோ உருவாக்கப்பட்டது அல்ல. அதை உருவாக்கியவர் கரம்சந்த் மோகன்தாஸ் காந்தி.
ஏன்? நான் சுதேசி இயக்கத்தில் பேசுகிறேன், என்பதற்கு பதில் சொல்வதற்கும் இது ஏதுவாய் அமைந்துவிட்டது. இந்திய தேசியம் பேசுகிறவர்களைப் பலர் எதிரியாகப் பார்க்கிறார்கள்.
ஏனய்யா நீங்க மட்டும் தமிழ் தேசியம்னு பேசலாம். இவர்கள் இந்திய தேசியம் பற்றி பேசக்கூடாதா? என தமிழ் தேசியக் கட்சிகளுக்கு கேள்வி எழுப்பினார்.
சுதேசி என்பது புரியாத விசயம் ஒன்றும் இல்லை. அண்ணன் சீமான் பேசுவதற்கு பெயரே சுதேசி.
சீமான் சிறிய அளவில் பேசுகிறார். இவர்கள் மிகப்பெரிய அளவில் சுதேசி பேசுகிறார்கள் என கூறிமுடித்தார்.