போலி இன்ஸ்டாகிரம் கணக்கில் பெண்களுடன் மன்மதலீலை; இன்ஜினியர் கைது, பெண்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்.
சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளும் அதனால் பெண்களுக்கும் ஏற்படும் விபரீதங்களுக்கும் பஞ்சமில்லை. தற்போது இதற்கு பேஸ்புக் தளத்தை விட இன்ஸ்டாகிரம் பிரபலமாகி வருகிறது.
சென்னையில் இருக்கும் பெண்ணிடம் நண்பராகி பழகி அவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து 50000 வரை பணம் கேட்டு மிரட்டிய ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர் கைது.
பணம் தராவிட்டால் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாகவும் அவரை மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அந்த பெண் தன் கணவரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.
சென்னை புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அவர்கள், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு இ-மெயில் மூலம் ஒரு புகார் அளித்துள்ளனர்.
இது ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிழக்கு தெருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்தது. கம்பியூட்டர் என்ஜினீயரான அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சிவக்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரில் ஒரு கணக்கும், சுகன்யா, பிரியா என்ற பெயர்களில் போலி கணக்கும் வைத்து இந்த மிரட்டல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
நட்பாக அக்கறை உணர்வுடன் பழகி பிறகு அவர்களையே தனக்கு சாதகமாக பயனபடுத்தி இவ்வாறு லீலை வேலைகளில் ஈடுபட்ட அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.