Home நிகழ்வுகள் தமிழகம் சீர்காழி கடற்கரையில் ஒதுங்கிய ராக்கெட் லாஞ்சர்; மக்கள் பதற்றம்

சீர்காழி கடற்கரையில் ஒதுங்கிய ராக்கெட் லாஞ்சர்; மக்கள் பதற்றம்

294
0

சீர்காழி கடற்கரையில் ஒதுங்கிய ராக்கெட் லாஞ்சர்; மக்கள் பதற்றம், கடலோரே காவல்படை தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது.

நாகை மாவட்டம் திருமுல்லைவாசல் கடற்கரையில் ராக்கெட் லாஞ்சரை போல் கரை ஒதுங்கி இருக்கும் மர்மப் பொருள் என்னவென்று கடலோரே காவல் ஆய்வு செய்கிறது.

ஒரு அடி உயரமும், 11 இஞ்ச் சுற்றளவும் கொண்ட சிலிண்டரின் மீது காற்றாடி வைக்கப்பட்டது போன்று பார்ப்பதற்கு இருக்கிறது. 

இதை கண்ட மீனவர்கள் உடனே அங்குள்ள கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் சதீஷ், எஸ்ஐ ராஜா ஆகியோர் சென்று கரை ஒதுங்கிய பொருளை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் அடிப்படையில் ராக்கெட் லாஞ்சர் போர்க்கப்பல் அல்லது நீர்மூழ்கி கப்பலில் இருந்து கழன்று விழுந்து கடல் அலையில் சிக்கி கரை ஒதுங்கி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 

மேலும் இது கரை ஒதுங்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here