Home நிகழ்வுகள் இந்தியா 3330-க்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கொரோனா

3330-க்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கொரோனா

0
220
இந்தியர்களுக்கு கொரோனா

3,330க்கும் அதிகமான வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், 25-க்கும் அதிகமானோர் உயிர் இழந்து உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கொரோனா

குவைத் மற்றும் சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பும் மேலும் 53 நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் கொரொனா பாதிப்பு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

குவைத்தில் 785 பேரும் அதை தொடர்ந்து சிங்கப்பூரில் 630 பேரும், கத்தாரில் 420 பேரும், இரானில் 308 பேரும், ஓமனில் 297 பேரும், சவுதியில் 186 பேரும் மற்றும் பக்ரைனில் 135 பேரும் இந்த நோயால் பாதிப்படைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து இத்தாலியில் 91 பேரும், மலேசியாவில் 37 பேரும் போர்ச்சுகளில் 36 பேரும் கானாவில் 29 பேரும் இந்த நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 24 பேர் யூஎஸ்ஸிலும், 15 பேர் சுசர்லாந்து மற்றும் 13 பேர் பிரான்சிலும் இந்த நோயால் பாதிப்படைந்துள்ளது தெரியவந்துள்ளது.

மற்ற இந்தியர்களும் மே 3 வரை இந்தியாவில் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் அவர்கள் இருக்கும் நாடுகளிலேயே பாதுகாப்புடன் இருக்கும் படி இந்தியா அறிவுறுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here