சென்னை: மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா பரவி வரும் நிலையில் பாயிண்ட் டூ பாயிண்ட் இரயில் சேவைகளை மட்டும் இயக்க தொடர்வண்டி துறை முடிவு செய்துள்ளது.
பாயிண்ட் டூ பாயிண்ட் இரயில் விவரங்கள்
மாநில அரசிடம் கேட்டு கொண்டதன் அடிப்படையில், தெற்கு இரயில்வே ஜூன் 29 முதல் திருச்சி – செங்கல்பட்டு – திருச்சி(விருத்தாசலம் வழி), திருச்சி – செங்கல்பட்டு- திருச்சி(மயிலாடுதுறை வழி), அரக்கோணம் – கோவை – அரக்கோணம், மதுரை – விழுப்புரம் – மதுரை, கோவை – காட்பாடி – கோவை, கோவை – மயிலாடுதுறை – கோவை மற்றும் திருச்சி – நாகர்கோவில் – திருச்சி தினசரி சிறப்பு தொடர்வண்டி ஆகிய இரயில் சேவைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்தவர்களுக்கு தொகை திரும்ப வழங்கப்படும்
இரத்து செய்யப்பட்ட இரயில்களுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் மற்றும் ஆன்லைன் பதிவு செய்தவர்களுக்கு தானாகவே திரும்ப வங்கி கணக்கிற்கு தொகை வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக இரயில் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட 6 மாதங்களுக்குள் தொகை திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.