Home நிகழ்வுகள் தமிழகம் கிட்னி, கண், இதயம் திருட்டு? நடிகை சந்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

கிட்னி, கண், இதயம் திருட்டு? நடிகை சந்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

1005
0
கிட்னி

கிட்னி, கண், இதயம் திருட்டு? நடிகை சந்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

சென்னையில் நடிகை சந்தியா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். சந்தியாவின் கணவர் இயக்குனர் பாலகிருஷ்ணன்.

பள்ளிக்கரணை பகுதியில் சந்தியாவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. கைகளில் குத்தியிருந்த டாட்டூவை வைத்து அவருடைய உடற் பாகம் தான் என போலீசார் உறுதி செய்தனர்.

அவரைக் கொலை செய்தது அவரது கணவர் தான் என போலீசார் பாலக்கிருஷ்ணனை கைது செய்தனர்.

கொலை நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் கை, கால், இடுப்பு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. தலை கிடைக்கவே இல்லை.

இந்நிலையில் சந்தியாவின் உடல் உறுப்புகளை, மர்ம கும்பல் திருடியிருக்கலாம் என அவரது சகோதரி சஜிதா அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இந்தக் கொடூரக் கொலையை ஒருவர் மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை. இதில் ஏதோ சதி உள்ளதாக சந்தியாவின் உறவினர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கிட்னி, இதயம், கண் ஆகிய உடலுறுப்புக்களுக்காக சந்தியா கொலை செய்யப்பட்டு இருக்கலாம்.  இதில் பலர் தொடர்புடையவர்களாக இருக்கலாம்.

போலீசார் இவ்வழக்கை திசைதிருப்ப முயற்சி செய்கின்றனர் என சந்தியாவின் உறவினர்கள் சந்தேகித்துள்ளனர்.

Previous articleமோடி முன் தில்லாக சக்மாவின் இடுப்பை தடவிய அமைச்சர் – வீடியோ
Next articleடிக் டாக் செயலி விரைவில் ஊத்தி மூடப்படும்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here