தூத்துக்குடி: ஞாயிற்றுக்கிழமை மாலை பாதுகாவலரால் கத்தியால் குத்தப்பட்ட காவலர் புதன் கிழமை காலமானார்.
கே. புங்கலிங்கம் சிகிச்சை பலன் அளிக்காமல் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதன் கிழமை காலமானார்.
குத்தியவர் செல்வம் என்ற பாதுகாவலர்
கத்தியால் குத்தியவர் செல்வம் என்பதும், எம்.ஜி.ஆர் பூங்காவில் பாதுகாவலராக பணிபுரிபவர் என்பதும் தெரியவந்தது.
குடித்திருந்த நிலையில் இருந்த காவலர்
இறந்த காவலருக்கு 48 வயது என்பதும் சம்பவத்தன்று சீறுடையில் இல்லாமல் குடித்திருந்த நிலையில் இருந்தார் என்பதும் தெரியவருகிறது.
இருவருக்கும் இடையே வாக்குவாதம்
சம்பவம் நடந்த அன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி பிறகு பாதுகாவலரால் காவலர் கத்தியால் குத்தப்பட்டு சரிந்து விழுந்தார் மற்றும் 4 மணி நேரம் வரை இரத்த போக்கு இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் இரவு 7 மணி அளவில் நடந்தேரியது.
குற்றவாளி செல்வம் கைது
இதை தொடர்ந்து குற்றவாளி செல்வம் கைது செய்யப்பட்டு கொலை முயற்ச்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
காவலரின் இறப்பிற்கு பிறகு, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என காவல் துறை அதிகாரி அருண் பாலகோபாலன் தெரிவித்தார்.
இறந்த காவலர் புங்கலிங்கம் மார்ச் 2008 முதல் காவல் துறையில் பணியில் உள்ளவர் என்பதும் அவருக்கு காசியம்மாள் என்ற மனைவி மற்றும் 8, 16 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.