சென்னை: தென்மேற்கு பருவக்காற்று துவங்க இருப்பதால், அதற்கு தகுந்தாற் போல் பேரிடர் மேலாண்மை திட்டங்களை மாற்றியமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு இட்டது.
கூடுதல் முகாம்கள் மற்றும் துயர் துடைப்பு மையங்கள்
மக்கள் சமூக விலகலை கடைபிடித்து தங்குவதற்கு ஏற்ற கூடுதல் முகாம்கள் மற்றும் துயர் துடைப்பு மையங்கள் கண்டுபிடிக்குமாறு மாவட்டங்களுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது..
தென்மேற்கு பருவக்காற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜே. இராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதினார்.
கொரோனா பரவல் இருக்கும் நேரத்தில் புயல்
“கொரோனா பரவல் பிரச்சனை உள்ள இந்த நேரத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையையும் கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற் போல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாவட்ட நிர்வாகம் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் சேர்த்து புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியான நேரத்தில் முடுக்கிவிட வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகம் முகாம்களில் அதிக கூட்டம் சேர்வதை தடுக்கும் பொருட்டு அதிக அளவிலால முகாம்களை கண்டுபிடிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது மற்றும் சமூக விலகலை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.