Home Latest News Tamil சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வெள்ளி முதல் 12 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு: தலைமை செயலர்...

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வெள்ளி முதல் 12 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு: தலைமை செயலர் கே. சண்முகம்

தலைமை செயலர் கே. சண்முகம்

சென்னை: வெள்ளி முதல் 12 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடைபிடிக்கும் படி தலைமை செயலர் கே. சண்முகம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

வெளியில் சுற்றுபவர்கள் 144 சட்டப்பிரிவில் கைது

இந்த ஊரடங்கு நாட்களில் வெளியில் சுற்றுபவர்கள் 144 சட்டப்பிரிவில் கைது செய்யப்படுவர் மற்றும் சுற்றுபவர்களது வாகனங்கள் பரிமுதல் செய்யப்படும் என காவல் துறை தெரிவித்தது.

மளிகை வாங்க 2 கி.மீ சுற்றளவு மட்டுமே வெளியில் அனுமதி

மக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க 2 கி.மீ சுற்றளவு மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்படுவார்கள். மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும்.

உணவகங்களில் உணவுகளை வாங்கி செல்ல காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை அனுமதி வழங்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

ஜூன் 21 மற்றும் ஜீன் 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பால் வினியோகம், மருந்துவமனை, மருந்துகடை, அவசர ஊர்தி, இறுதி ஊர்வல ஊர்தி போன்றவை மட்டும் அனுமதி.

ஆட்டோ மற்றும் வாடகை மகிழுந்துகள் மருத்துவ அவசரத்திற்கு மட்டும் பயண்படுத்தலாம் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here