Home Latest News Tamil ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை 4 மாவட்டங்களில் ஊரடங்கு: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை 4 மாவட்டங்களில் ஊரடங்கு: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

4 மாவட்டங்களுக்கு 12 நாட்கள் முழு கொரோனா ஊரடங்கு 

மேலும் முதல்வர் தேசிய பேரிடர் சட்டம் 2005 இன் கீழ் கொரோனாவால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளான மாவட்டங்களாக கருதப்படும் 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு   அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

நிபுனர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை

தமிழ்நாட்டு அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை மற்றும் மற்ற அமைச்சர்கள் அமைத்த நிபுனர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழக முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தின் கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கை 46,504

திங்கள் அன்று தமிழ்நாட்டில் 1,843 கொரோனா தொற்று உறுதி. தமிழகத்தின் கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கை 46,504 ஆக உள்ளது.

சென்னையின் மொத்த தொற்று 33,244 ஆக உள்ளது

இதில் சென்னையில் மட்டும் 1,257 தொற்றுகள் திங்கள் கிழமை உறுதி செய்யப்பட்டு உள்ளன. சென்னையின் மொத்த தொற்று 33,244 ஆக உள்ளது.

மொத்த கொரோனா இறப்பு 479

திங்கட்கிழமை 44 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். தமிழ்நாட்டின் மொத்த கொரோனா இறப்பு 479 ஆக உள்ளது.

Previous articleசீனா அத்துமீறல் இந்திய இராணுவ அதிகாரி மற்றும் சிப்பாய்கள் உயிரிழப்பு
Next articleகர்நாடகாவிற்கு கொரோனா ஊரடங்கு தேவை இல்லை என மோடியிடம் கோரிக்கை: எடியூரப்பா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here