Home நிகழ்வுகள் இந்தியா சீனா அத்துமீறல் இந்திய இராணுவ அதிகாரி மற்றும் சிப்பாய்கள் உயிரிழப்பு

சீனா அத்துமீறல் இந்திய இராணுவ அதிகாரி மற்றும் சிப்பாய்கள் உயிரிழப்பு

இராணுவ அதிகாரி மற்றும் சிப்பாய்கள் உயிரிழப்பு

புதுடெல்லி: லடாக்கில் கால்வன் என்ற பகுதியில் சீன மற்றும் இந்திய எல்லையில் இரு நாட்டு இராணுவத்திற்கு இடையே நடந்த மோதலில் இந்தியாவின் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு சிப்பாய்கள் உயிரிழப்பு.

இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு சிப்பாய்கள் உயிரிழப்பு

“நேற்று இரவு லடாக்கில் எல்லையில் உள்ள கால்வன் என்ற பல்லத்தாக்கில் விரிவாக்க பணிகள் நடந்த வேலையில் இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையெ நடந்த மோசமான மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்புகள். இந்திய தரப்பில் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு சிப்பாய்கள் உயிரிழந்தனர். இருதரப்பிலிருந்தும் பதற்றத்தை குறைக்க உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்,” என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1975 ஆம் ஆண்டிற்கு பிறகு சீன-இந்திய எல்லையில் உயிரிழப்பு

முதல் முறையாக 1975 ஆம் ஆண்டிற்கு பிறகு சீன-இந்திய எல்லையில் உயிரிழப்பு நடந்திருப்பது தற்போதுதான் என தெரிவிக்கப்படுகிறது.

சீன தரப்பில் உயிரிழப்புகள் எவ்வளவு என இன்னும் தெரிவிக்கப்படவில்லை. சீன வெளியுரவுத்துறை அமைச்சர் ஜாவோ லிஜியன் எல்லையில் எந்த உயிரிழப்பு சம்பவமும் நடந்ததாக தனக்கு தெரியாது என கூறினார்.

கடந்த ஐந்து வாரங்களாக கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையே பதற்றம் நிலவியதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here