மேலும் தளர்வுகளுடன் தமிழ்நாட்டில் மே 31 வரை கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி இன்று அறிவித்தார்.
தமிழக முதல்வர் 25 மாவட்டங்களில் இரண்டு மாதங்களுக்கு பிறகு பொது போக்குவரத்து தொடக்கம் போன்ற புதிய தளர்வுகளை இன்று அறிவித்தார்
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் தளர்வு இல்லை
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் எந்த தளர்வுகளும் இன்றி தற்போதிய 3ஆம் கட்ட ஊரடங்கு விதிமுறையே 4ஆம் கட்ட ஊரடங்கிற்கும் கடைபிடிக்கப்படும் என முதல் அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் மதம் சம்பந்தபட்ட கூட்டங்கள் ஆகியவற்றிற்கு தடை நீடிக்கப்படுவதாக தெரிவித்தார்.
“ஈ-பாஸ்” இல்லாமல் பயணம்
எடப்பாடி பழனிச்சாமி மேலும் தெரிவிக்கையில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் மற்ற 20 மாவட்டங்களுக்கு “ஈ-பாஸ்” இல்லாமல் மாவட்டங்களுக் கிடையில் பயணம் செய்வது உள்ளிட்ட புதிய தளர்வு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இதுவரை 10,585 கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளன இதில் 3,538 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 74 பேர் இறந்துள்ளனர்.
இந்திய அளவில் 3ஆம் கட்ட ஊரடங்கு இன்று முடிவுக்கு வரும் நிலையில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் இடத்தில் தமிழ்நாடு
சுகாதாரத்துறை அறிக்கையின்படி 30,706 கொரோனா தொற்றுகளுடன் மராட்டியம் முதலிடத்திலும் அதை தொடர்ந்து 10,988 தொற்றுகளுடன் இரண்டாம் இடத்திலும் மற்றும் 10,585 தொற்றுகளுடன் தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இந்தியாவின் மொத்த கொரோனா தொற்று 90,000க்கும் அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டாம் நாளாக 500க்கும் குறைந்த கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன மற்றும் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழ்நாட்டு மக்கள் அஞ்சவேண்டாம், அரசு பரிசோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளது மற்றும் புதிய யுத்திகள் மூலம் கொரோனாவை கட்டுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது என சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.