தூத்துக்குடியில் தமிழிசையை விரட்டிய மக்கள்; வீடியோவால் பரபரப்பு
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து பாஜக வேட்பாளராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.
இவர் வேட்புமனு செய்தபோது சரியான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என வேட்புமனுவை ஏற்பதில் தாமதமானது.
பின்பு ஒரு வழியாக வேட்புமனுவை ஏற்றுக்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் இன்று அவர் தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவரைப் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. தொகுதி பக்கம் வரக்கூடாது என பொதுமக்கள் சிலர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உட்பட எந்தவித பிரச்சனையின்போதும் தொகுதி பக்கமே எட்டிப்பார்க்காதபோது, தேர்தல் வருகிறது என்ற உடன் வாக்குக் கேட்டு வருவதா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தமிழிசை அந்தப் பகுதியில் பிரச்சாரத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு கிளம்பிவிட்டார்.
தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இதேபோன்று எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டபோது பெரியார் வாழ்க என்ற கோசம் அவருடைய பேச்சையும் மீறி சத்தமாக ஒலித்தது.