ஹெல்மெட் போடாமல் துளி கூட பயம் இல்லாமல் டெல்லியை கதறவிட்ட தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணியில் ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.3 ஓவர்களில் 36 ரன்கள் சேர்த்தது. ப்ரித்வி ஷா, 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நீண்ட நேரம் விளையாடி 18 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார்.
பின்னர் வந்த அதிரடி பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் 13 பந்துகளைச் சந்தித்த அவர் 25 ரன்கள் எடுத்து பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு டெல்லி அணியின் விக்கெட் சரிய சரிய ரன் ரேட் குறைந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி தரப்பில் சிகர் தவான் அரைசதம் அடித்தார்.
பின்னர் களம் இறங்கிய சென்னை அணியில் ராயுடு சொற்ப ரன்னில் அவுட் ஆக வாட்சன் மற்றும் ரெய்னா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அணி 73 ரன்கள் இருக்கும் பொழுது வாட்சன் அவுட் ஆக, 11 ஓவரில் அணியின் ஸ்கோர் 98 இருக்கும் பொழுது ரெய்னா பெவிலியன் சென்றார்.
அதன்பிறகு களத்திற்கு வந்த தோனி மற்றும் ஜாதவ் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதி ஓவரில் இரண்டு பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் சென்னை அணி வெற்றிபெற்றது.