தமிழ்செல்வியை கடத்திய கொடூரன்; விரட்டி விரட்டி அடித்த திருச்சி மக்கள்!
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே, நடுப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் தமிழ் செல்வி. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.
சிறுமி தமிழ்செல்வி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியை காரில் கடத்திக்கொண்டு கிளம்பிவிட்டார். அங்கு இருந்த பள்ளி மாணவர்கள் இதைக் கவனித்து விட்டனர்.
தமிழ்செல்வியை அவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால், அவரை யாரோ கடத்திக்கொண்டுபோவதை உணர்ந்துவிட்டனர்.
உடனே கூச்சலிட்டு அனைவரையும் அழைத்துள்ளனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் சிலர், காரை விரட்டிச்சென்று பொன்னம்பலம் பட்டியில் உள்ள டோல்கேட்டில் மடக்கிப் பிடித்தனர்.
காரில் இருந்த தமிழ்செல்வியை மீட்டதுடன், கடத்தல் நபரை அடித்துத் துவைத்தனர். தமிழ் செல்வி இட்லி கேட்டதால் வாங்கிக்கொடுக்க அழைத்து வந்ததாக அந்த கடத்தல் நபர் தெரிவித்துள்ளார்.
வாய்பேச முடியாத சிறுமி எப்படி இட்லி கேட்பாள் என வெளுவெளுவென அந்த கொடூரனை மீண்டும் அடித்துத் துவைத்தனர்.
பின்பு அங்கு வந்த போலீசார் அந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்த கொடூரன் திருச்சி மாவட்டம் தென்னூரைச் சேர்ந்த இஸ்மாயில் எனத் தெரிய வந்துள்ளது.