புதிய டிடிஎச் கட்டணம்: மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம்!
இந்தியா முழுவதும் அரசு கேபிள் டிவியை டிஜிட்டலாக மாற்றும் பணி விரைவில் நிறைவடைய உள்ளது.
கேபிள், டி.டி.ஹெச் ஆகியவற்றிற்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என ட்ராய் மாதக்கட்டண முறையை மாற்றியமைத்தது.
விரும்பிய சேனலுக்கு மட்டும் பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
தற்போதைய புதிய கட்டணம் அதிகமாக உள்ளதாக கருத்துக்கள் நிலவி வருகிறது. மேலும் கேபிள் டிவி ஆபரேட்டர்களும் இதை எதிர்த்துள்ளனர்.
இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டம் என ட்ராய் தொடர்ந்து கூறி வருகிறது.
டிடிஹெச்சின் (DTH) புதிய கட்டண பிப்ரவரி 1-ம் தேதியே அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்ச் 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
புதிய கட்டண முறைப்படி சேனல்களைத் தேர்வு செய்வதில் இன்னும் பெரும்பாலானவர்களுக்கு குழப்பம் உள்ளது. எனவே கால அவகாசத்தை நீட்டித்து உள்ளதாக ட்ராய் கூறியுள்ளது.