சென்னை: தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் தேனீர் கடைகள் திறப்பு உட்பட சில முக்கிய கொரோனா ஊரடங்கு தளர்வுகளை சனிக்கிழமை அறிவித்தது. இந்த தளர்வுகள் மே 11(திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தது.
தமிழக அரசு அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது , அத்தியாவசிய கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 7 மணி வரை திறக்க அனுமதி. மற்ற கடைகள் சென்னையில் காலை 10:30 மணி முதல் மாலை 6 மணி வரையும், தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் காலை 10:00 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
33% ஊழியர்கள் அனுமதி
33% ஊழியர்கள் அனைத்து தனியார் நிறுவனங்களிலும் சென்னையின் மாநகரபகுதியில் காலை 10:30 மணிமுதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனீர் கடைகள், பெட்ரோல் பங்குகள் திறப்பு
மேலும் தமிழ்நாடு முழுவதும் தேனீர் கடைகள் திறக்கப்படலாம் என்றாலும் வீட்டிற்கு வாங்கி செல்ல மட்டுமே அனுமதி எனவும் தேனீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க அனுமதிக்கபடுவதாகவும் அறிவிப்பில் தெரியவருகிறது.
அனைத்து கடைகளிலும் சமூக விலகல் மற்றும் அனைத்து அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகளும் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பெட்ரோல் பங்குகளும் சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை திறக்க அனுமதி எனவும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் நாள் முழுக்க செயல்பட அனுமதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.