டிக் டாக் செயலி விரைவில் ஊத்தி மூடப்படும்!
செல்போன் முதன் முதலில் பரவலாக பயன்பாட்டிற்கு வந்த பிறகு பெண்கள் தங்களுடைய மொபைல் எண்ணைக் கொடுப்பதற்கே தயங்கினர்.
முகநூல், வாட்ஸ்ஆப் என வந்த பிறகும் கூட பலர் செல்போன் எண், பேஸ்புக் அட்ரஸ் ஆகியவற்றை கொடுக்கத் தயங்கினர்.
டப்ஸ்மாஸ், மியுசிக்கலி, டிக் டாக், ஸ்முல் போன்ற செயலிகள் அறிமுகம் செய்தபின்பு பல பெண்கள் முற்றிலும் மாறிவிட்டனர்.
செல்போன் எண்களைக் கொடுப்பதற்கே தயங்கிய பலர், ஆபாச அரங்கேற்றத்தை உலகுக்கே காட்ட துணிந்துவிட்டனர்.
இந்த செயலியின் வடிவம் அப்படி அமைக்கப்பட்டுள்ளது. முதலில் தங்களுடைய திறமையை வளர்த்துக்கொள்ளும் பொழுதுபோக்கு செயலியாக இதைப் பயன்படுத்துவார்கள்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அடிமையாகி விடுகின்றனர். மற்றவர்களைப்போல தானும் பிரபலம் அடைய வேண்டும் என எண்ணி எதையும் செய்ய துணிந்துவிடுகின்றனர்.
அதிக லைக்குகள், அதிக பார்வையாளர்களை பெற ஆடைகளை குறைத்து கவர்ச்சியாக வீடியோவை வெளியிடுகின்றனர்.
ஊரே அம்மணமாக உள்ளபோது ஒருவன் மட்டும் கோவணத்துடன் சென்றால் அவனை பைத்தியக்காரன் எனக் கூறுவார்கள்.
அப்படி தான் ஆகிவிட்டது டிக்டாக் பயனர்களின் நிலமை. இதை எதிர்பவர்களை அனைவரும் தங்களுடைய வளர்ச்சியைப் பார்த்து பொறமை கொள்வதாய் நினைத்து விட்டனர்.
மேலும் எல்லோரும் ஆபாசமாக வீடியோ வெளியிடுவதால் அதை ஒரு பொருட்டாகவே யாரும் எடுத்துக்கொள்வதில்லை.
இதைத் தடை செய்யவேண்டும் என சட்டசபை வரை சென்று பேசினார் தமிமுன் அன்சாரி. மேலும் இது குறித்து மத்திய அரசிடமும் பேச உள்ளனர்.
ஆளும் கட்சி முதல் எதிர் கட்சிகள் வரை அனைவரும் டிக்டாக் செயலியை தடை செய்ய ஆதரவு தெரிவித்துள்ளனர்.
விரைவில் இந்தியாவில் டிக்டாக் செயலி ஊத்தி மூடப்பட போகிறது.
            


