சென்னை: தமிழ்நாட்டின் பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செவ்வாய் கிழமை இந்த ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 1இல் ஆரம்பிக்கப்பட்டு ஜூன் 12 2020இல் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் தள்ளிவைப்பு
இதற்கு முன்னர் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மார்ச் 27 இல் இருந்து ஏப்ரல் 13 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலால் ஏற்பட்ட ஊரடங்கினால் இது தள்ளிவைக்கப்பட்டது.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் மாநில அரசு பள்ளிகள் திறப்பு குறித்து கொரோனா ஊரடங்கிற்கு பின் முடிவு செய்யும் என கூறினார்.
12ஆம் வகுப்பிற்கான விடைதாள் திருத்தம் மே 27 ஆம் தேதியிலிருந்து துவங்கப்படும் என தெரிவித்தார். மார்ச் 26 இல் வைக்கப்பட வேண்டிய 11ஆம் வகுப்பிற்கான தேர்வு ஜுன் 2இல் வைக்கப்படும் எனவும், 12 வகுப்பு தேர்வுக்கு வராதவர்களுக்கு மறுதேர்வு எழுதும் வாய்ப்பு ஜூன் 4,2020இல் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
10ஆம் வகுப்பு தேர்வு கால புதிய அட்டவணை
பாடம் | தேர்வு நடைபெறும் நாள் |
மொழி (தமிழ்) | 01/06/2020 |
ஆங்கிலம் | 03/06/2020 |
கணக்கியல் | 05/06/2020 |
விருப்ப மொழி | 06/06/2020 |
அறிவியல் | 08/06/2020 |
சமூக அறிவியல் | 10/06/2020 |
தொழிற்கல்வி (VOCATIONAL) | 12/06/2020 |