மதுரை: குஜராத்திலிருந்து மதுரை திரும்பிய 68 வயதுடைய முதியவர் சின்ன உடைப்பு பகுதியில் உள்ள தனிமைபடுத்துதல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நெஞ்சு வலிப்பதாக கூறினார் பிறகு சற்று நேரத்தில் மரணமடைந்தார்.
இறந்தவர் 68 வயதுடைய என். முத்துராமலிங்கம் என்பதும் இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அருப்புக்கோட்டையில் உள்ள கள்ளூர்னி பகுதியை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் திரும்பியவர்
வெளிமாநிலத்திலிருந்து வந்த தமிழர்களில் இவரும் ஒருவர் எனவும், அகமதாபாத்தில் உள்ள நொறுக்கு தீனி உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் மதுரையை வந்தடைந்த பிறகு சின்ன உடைப்பு என்னும் இடத்தில் இருந்த தனிமைப்படுத்தல் முகாமில் 60 பேர்களுடன் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.
அவணியாபுரத்திலிருந்து ஒரு காவல் அதிகாரி தெரிவிக்கையில் முத்துராமலிங்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார் இதை அடுத்து அவர் தனிமைபடுத்தல் முகாமில் இருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்பு அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது இதை அடுத்த அவரது உடல் அவரது உறவினர்களிடம் வழங்கப்பட்டது.