சென்னை: குடும்ப அட்டை தாரர்களுக்கு அவர் அவர் வீட்டிற்கே வந்து இலவச ரேசன் பொருட்களை பொது வினியோக திட்டத்தின் கீழ் பெறுவதற்கான டோக்கனை ஏப்ரல் 24 மற்றும் 25 இல் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது.
ரேசன் கடையில் கூடும் கூட்டத்தினால் பரவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“பொருட்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் அந்த டோக்கனில் இடம்பெற்றிருக்கும்”, எனவும் “அதை வைத்து பொது வினியோக முறைப்படி இந்த ரேசன் பொருட்களை அது வழங்கப்படும் இடத்திற்க்கு சென்று பெற்றுக் கொள்ளலாம், இதை மக்கள் பயண்படுத்திக்கொள்ள வேண்டும்”, என அறிவிக்கப்பட்டது.
குடும்ப அட்டைதாரர்கள் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு சமூக இடைவெளி விட்டு இந்த இலவச பொருட்களை பெற்று கொள்ளலாம்.
மேலும் இந்த இலவச ரேசன் பொருட்கள் மே மாதம் பொது வினியோக முறையில் கிடைக்கும் எனவும் இதில் 1கிலோ சக்கரை, 1கிலோ பருப்பு மற்றும் சமயல் எண்ணை ஆகியவை அரிசியுடன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்ட இலவச பொருட்களால் 1.89 கோடி குடும்பங்கள் பயண்பெற்று உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.