Home நிகழ்வுகள் தமிழகம் அந்தியூர் காட்டில் இறந்த நிலையில் காணப்பட்ட காட்டெருமைகள் : ஈரோடு

அந்தியூர் காட்டில் இறந்த நிலையில் காணப்பட்ட காட்டெருமைகள் : ஈரோடு

காட்டில் இறந்த நிலையில் காணப்பட்ட காடெருமைகள்

ஈரோடு: அந்தியூர் காட்டு எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு காட்டெருமைகள் செவ்வாய்கிழமை இறந்த நிலையில் காணப்பட்டது. வனத்துறையை சார்ந்தவர்கள் வயது சம்பத்தப்பட்ட நோயால் அவை இறந்திருக்கக் கூடும் என தெரிவித்தார்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ரோந்து பணி

செவ்வாய்கிழமை அந்தியூர் காட்டு பகுதியை சேர்ந்த அதிகாரிகள், என்னமங்களம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.

இறந்து கிடந்த காட்டெருமைகள் 

அப்போது இரண்டு காட்டெருமைகள் இறந்து கிடந்த காட்சியை கொல்லுபால் என்ற காட்டு பகுதியில் கண்டுள்ளனர்.

இந்திய காட்டெருமைகளின் சராசரி வாழ்நாள் 25 முதல் 30 வயது ஆகும். “இறந்த இரண்டு காட்டெருமைகளின் வயது 18 முதல் 20 இருக்கும்,” என அந்தியூர் வனக்காவலர்(FRO)  கே. உதிரசாமி தெரிவித்தார்.

விலங்குகள் மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு

விலங்குகள் மருத்துவர் கே. அசோகனை தலைமையாக கொண்டு செயல்பட்ட மருத்துவர் குழு சம்பவ இடத்திற்கு வந்து உடற்கூறு ஆய்வை மேற்கொண்டனர்.

வயது முதிர்வினால் ஏற்பட்ட நோயினால் இறந்தன

“வயது முதிர்வினால் ஏற்பட்ட நோயினால் இரண்டு காட்டெருமைகளும் இறந்துள்ளது உடற்கூறு ஆய்வில் உறுதி செய்யப்பட்டது,” என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டெருமைகளின் உடல்கள் காட்டில் அடக்கம் செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here