பெண்களை தொடர்ந்து அதிகளவில் தாக்கும் கொரோனா. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியா தற்போது கொரோனா பாதிப்பு பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
சென்னை : இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஆண்களே அதிகளவில் இருந்துவந்த நிலையில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு கொரோனா அதிகமாக உறுதியாகி வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஆறு வாரத்தில் பெண்களிடம் கொரோனா பாதிப்பு 6% உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மே 5ம் தேதி தமிழகத்தில் மொத்தம் 4058 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் 1311 பேர் பெண்கள் ஆவர். இது மொத்த பாதிப்பில் 32% ஆகும். இதனை அடுத்து மே 15ம் தேதி தமிழகத்தில் பதிவான கொரோனா தொற்றுகளில் 3463 பேர் பெண்கள்.
மே 5ம் தேதி தமிழகத்தில் மொத்தம் 10,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது தமிழகத்தில் மொத்தம் 44661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 17,124 பேர் பெண்கள் ஆவர். தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 38% பேர் பெண்களாக உள்ளனர். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் மூலம் நோய் பரவல் முதலில் தொடங்கியது.
இதனால் துவக்கத்தில் பெண்களில் அதிக பாதிப்பு இல்லை. ஆனால், தற்போது நோய் பரவல் அதிகமாகி வரும் சூழலில் வீட்டில் உள்ள பெண்களுக்கும் தொற்று ஏற்படுகிறது.
இதில் வயது வாரியாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கிட்டத்த சரி பாதி ஆணும், பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
13-60 வயதில் 37.7% பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38.21% பேரும் என பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பெண்களின் பாதிப்பு எண்ணிக்கையைவிட அவர்களின் இறப்பு சதவீதம் குறைவுதான்.