நாசா விண்வெளி மாநாடு; திருச்சி மாணவிக்கு கிடைத்த அறிய வாய்ப்பு, மாணவி காயத்ரி திருச்சி உறையுரை சேர்ந்தவர்.
வருகிற ஜூன் மாதம் அமெரிக்காவில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க திருச்சியை சேர்த்த மாணவி காயத்ரிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாசாவால் இணையத்தில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி அடைந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்ததாம்.
மேலும் அங்கு நடக்க விருக்கும் மாநாட்டில் நடக்கும் போட்டிகளில் தேர்ச்சி அடைந்தால் இலவசமாக அங்கையே கல்வி கற்கலாமாம்.
நாசா செல்ல நிதி நெருக்கடி
ஆனால் அங்கு செல்ல நிதி நெருக்கடி இருப்பதால் திருச்சி மாவட்ட ஆட்சியர் நிதி திரட்டி 75000 வரை கொடுத்துள்ளார். மேலும் முதலமைச்சர் அவர்களுக்கு இது பற்றி நிதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாணவி காயத்ரி திருச்சி உறையுரை சேர்ந்தவர், திருச்சியில் இருக்கும் கே. ராமகிரிஷ்ணா கல்லூரியில் இசிஇ படித்து வருகிறார். இவருடைய தந்தை அதே ஊரில் மருந்து வியாபாரம் செய்து வருகிறார்.