இளமதி எங்கே? கடத்தலில் தொடர்புடைய அதிமுக அமைச்சர் யார்? இளமதியை கடத்திய பாமகவினர் யார்? திருமாவளவன் ஏன் மறைமுகமாக கூறவேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தர்மாபுரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் செல்வன் (26). அதே கிராமத்தை சேர்ந்த இளமதி (23) என்ற பெண்ணை காதலித்துள்ளார்.
திராவிட விடுதலைக் கழகத்தின் உறுப்பினர் செல்வன் என்பதால் இவர்களுடைய திருமணம் சேலம், கவலாண்டியூரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திருமணம் நடைபெற்று உள்ளது.
கவலாண்டியூர் தலைமை உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுடைய திருமண புகைப்படங்கள் வாட்ஸ்ஆப், பேஸ்புக் என ட்ரெண்டிங் ஆகியது. சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.
காரில் கடத்தல்
இளமதியின் தந்தை பாமக-வைச் சேர்ந்தவராம். இதனால் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடியை பிரிக்க முடிவு செய்துள்ளனர்.
பாமக மற்றும் கொங்கு அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனை தாக்கி, காரில் கடத்தி செல்வன்-இளமதி இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லகூறியுள்ளனர்.
செல்வன்-இளமதி தம்பதியினர் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் செல்வனை ஒரு காரிலும், இளமதியை ஒரு காரிலும் ஏற்றிச்சென்றுள்ளனர்.
திவிக போராட்டம்
இந்த விஷயம் திராவிடர் விடுதலை கழகத்தினருக்கு தெரிந்தவுடன் சேலம் கொளத்தூர் பகுதியில் போராட்டத்தில் குதித்தனர். விடிய விடிய இந்த போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து திருமாவளவன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் இளமதியை கடத்தியது பாமகவினர் தான்.
இதில் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு நேரடி தொடர்பு உள்ளது. இதன் காரணமாகவே போலீசார் இந்த விஷயத்தில் துரிதமாக செயல்படாமல் உள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் திருமாவளன் அமைச்சர் பெயரை குறிப்பிடவில்லை.
இன்னும் காணவில்லை
இந்த சம்பவம் நடந்து நான்கு தினங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் இளமதி எங்கே உள்ளார் என்ற கேள்விக்கு விடையில்லை.
உயிருடன் உள்ளாரா? அல்லது ஆணவக்கொலை செய்யப்பட்டு விட்டாரா என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் where is ilamathi என்ற ஹாஸ்டாக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.