ஹாங்காங்க்: சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டி படைத்துவரும் நிலையில், அங்குள்ள பன்றி பண்ணைகளில் இருந்து தற்போது ஹெச்1என்1(G4 EA H1N1) என்னும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வந்துள்ளது.
2009 பரவிய பன்றிக்காய்ச்சலுக்கு 2,85,000 பேர் பலி
இந்த செய்தி உலக மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 2009 பரவிய பன்றிக்காய்ச்சலால் 2,85,000 பேர் கொல்லப்பட்டனர்.
G4 EA H1N1 என்று அழைக்கப்படும் பன்றி காய்ச்சல் வைரஸ்
இப்போது சீனாவில் பரவி வரும் இந்த வைரஸ் ஆனது G4 EA H1N1 என்று அழைக்கப்படுகிறது. இது 2016 ஆம் ஆண்டில் இருந்து சீனாவின் பன்றி பண்ணைகளில் பொதுவாக காணப்படும் ஒரு வைரஸ் ஆக கருதப்படுகிறது.
சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்
இந்த ஹெச்1என்1(H1N1) வைரஸ் மனிதர்களின் சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இந்த வைரஸ் பாதித்தால் சில பேருக்கு எந்த விதமான அறிகுறியும் விரைவில் தெரியாது எனவும் கூறப்படுகிறது.
மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் இது விரைவாக பரவக்கூடும் என்பதால் விஞ்ஞானிகள் இந்த வைரஸை முடிந்த வரை விரைவாக தடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.