Home நிகழ்வுகள் உலகம் கொரோனா வைரசை சாகடித்து சாதனை படைத்த 100 வயது தாத்தா

கொரோனா வைரசை சாகடித்து சாதனை படைத்த 100 வயது தாத்தா

1237
0
100 வயது தாத்தா

சீனாவைச் சேர்ந்த 100 வயது தாத்தா ஒருவர் COVID-19 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று அவர் பூரண குணம் அடைந்து உள்ளார்.

கடந்த பிப்ரவரி மதம் தான் இந்த பெரியவர் 100-வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். பிப்ரவரி 24-ம் தேதி கொரோனா தோற்று உள்ளதாக உகானில் உள்ள ஹூபேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சால், சுவாச நோய், அல்சைமர் நோய், ரத்த அழுத்தம் மேலும் இதயப்பிரச்சனையும் இருந்துள்ளது.

இப்படி ஒரு கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்ட இந்த முதியவர் உடலில் இருந்த கொரோனா வைரஸ் முற்றிலும் அழிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

ஹூபேஸ் மருத்துவமனை ஊழியர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் காண்பித்த அறிக்கை சீன மொழியில் உள்ளதால் முதியவரின் பெயரை அறியமுடியவில்லை.

மன தைரியத்துடன் இருந்தால் எமனே வந்தாலும் எதிர்த்து நிற்கலாம் என்பதற்கு இந்த முதியவரே சான்று.

Previous articleகீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா?: மண்ணுருண்ட பாடல் லிரிக் வெளியீடு!
Next articleHoli Celebration with Google; ஹோலி பண்டிகையை கூகிளோடு எப்படி கொண்டாடுவது
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here