Home நிகழ்வுகள் உலகம் ராகுல்காந்தியை மிரள வைத்த 14 வயது தமிழ் சிறுமி

ராகுல்காந்தியை மிரள வைத்த 14 வயது தமிழ் சிறுமி

968
0
ராகுல்காந்தியை மிரள வைத்த

ராகுல்காந்தியை மிரள வைத்த 14 வயது தமிழ் சிறுமி.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். துபாய் இளவரசரை நேற்று சந்தித்துப் பேசினார்.

அன்று மாலை, துபாயில் உள்ள இந்தியர்கள் முன்னிலையில் மேடையில் தோன்றிப் பேசினார். இதை காங்கிரஸ் ஐ.டி. விங் சமூக வலைதளத்தில் லைவ் செய்தது.

ராகுல் விழாவில் பல்வேறு விசயங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக பாஜகவைத் தாக்கிப் பேசினார்.

இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டது. மோடியை இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும் எனக்கூறி உங்களுடைய கருத்து என்ன என மக்களைப் பார்த்துக் கேட்டார்.

உடனே பலர் கையைத் தூக்கினர். அவர்களில் ஒரு சிறுமியும் கையத் தூக்கியுள்ளார். இதைக் கவனித்த ராகுல்காந்தி சிறுமியிடம் முதலில் மைக்கை கொடுக்க கட்டளையிட்டார்.

வணக்கம் என அந்த சிறுமி கூறிய பின்பே தமிழ் சிறுமி என அனைவருக்கும் தெரிந்தது. அவர் சிவகங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

இலங்கைத் தமிழர் படுகொலை ஆவணப் படத்தைப் பார்த்த நாள் முதலே காங்கிரஸ் மீது தீரக் கோபத்தில் இருந்ததாக நிகழ்சிக்குப்பின் தெரிவித்துள்ளார்.

இத்தனை நாள் இருந்த கோபத்தை தான் நான், ராகுலிடம் கேள்விகளாகக் கேட்டேன் எனவும் கூறியுள்ளார்.

பவித்ரா கேட்ட முதல் கேள்வி:

இந்தியாவில் மதவாதம் அதிகரித்து உள்ளதாக கூறிய நீங்கள் குஜராத் தேர்தல் என்றால் பட்டை அடித்துக்கொண்டு கோவிலுக்குள் செல்கிறீர்கள். அதுவே, காஷ்மீர் தேர்தல் என்றால் குல்லா அணிந்து கொண்டு மசூதிக்குள் செல்கின்றீர்கள் ஏன்?

ராகுல் காந்தியின் பதில்,

உடனே ராகுல் சுதாரித்துக்கொண்டு, அனைத்து மதத்தினரும் சமம் என்பதை உணர்த்தவே, அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்கின்றேன். விரைவில் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவேன் எனப் பதிலளித்தார்.

பவித்ரா கேட்ட இரண்டாவது கேள்வி:

இந்தியா சுதந்திரம் பெற்று, 80% ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. இத்தனை வருடம் செய்யாததை இப்போது எப்படிச் செய்யப் போகின்றீர்கள் எனக் கேட்டார்.

முதல் கேள்விக்கு நாசுக்காக பதிலளித்த ராகுலுக்கு இந்த கேள்விக்குப் பதில் கூற முடியாமல் சிரித்து சமாளிக்கத் துவங்கிவிட்டர். இதை புரிந்துகொண்ட ஐ.டி.விங் நேரலையை நிறுத்தியது.

சிறுமி விடுவதாய் இல்லை

மோடியின் ஆட்சிக்குபின்பே வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் மதவாதத்தை ஒழிப்போம் எனக் கூறி ஓட்டுக்கேட்காமல் ஊழல் இல்லா ஆட்சியைத் தருவோம் எனக் கூறுங்கள் எனக் கோரிக்கை வைத்தார்.

சிறுமி கர்ஜனைகளுக்கு இடையை ராகுல் காந்தியின் மேடை அதிர கைதட்டல்கள் கிடைத்துள்ளது.

சிறுமி என்று தானே என ராகுல் போட்ட கணக்கு தவறாகிப்போனது. இந்த அவமானம் ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசத்தில் ஏற்பட்ட பெரிய கரும்புள்ளி.

ராகுல் காந்தியை பஸ்பமாக்கிய பவித்ராவிற்கு, துபாய் தமிழ் சங்கம் விருது ஒன்றை அறிவித்துள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here