இத்தாலி கொரோனா நோயாளிகளை காப்பாற்ற 17 மருத்துவர்கள் உயிர்த்தியாகம்
உலகையே அச்சுறுத்தும் கோரோனோவால் சீனாவை விட அதிகம் பாதிக்கப்பட்டது இத்தாலி நாடுதான்.
ஒரு கட்டத்திற்கு மேல் இத்தாலியால் கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. மற்ற நாடுகளை விட இறப்பு விகிதம் இங்குதான் அதிகம்.
இத்தாலியில் இது வரை 59138 பாதிக்கப்பட்டுள்ளனர். 5476 பேர் உயிரிழந்துள்ளனர். 7024 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாள் ஒன்றுக்கு 700, 800 என இரக்கமில்லாமல் வேட்டையாடும் கொரோனா கொடூரனால் கலங்கிய இத்தாலி மக்கள்.
மக்கள் அனைவரையும் வெளியில் செல்லாமல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தது அந்நாடு. அனைத்து பயணங்களையும் தடை செய்தது.
In Italy 🇮🇹 17 doctors 🥼 died helping save others from the Coronavirus pandemic. These are nowadays heroes. Respect ✊🏼 #StayAtHome pic.twitter.com/kZR6KnFFqr
— Roberto Valent (@RobertoValentUN) March 23, 2020