கொரோனா வைரஸ் பிரிட்டன் இளவரசர், பிரிட்டன் பிரதமரை எடுத்து பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் மேட் ஹேன்காக் தொற்று உறுதியாக உள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 100 நாடுகளுக்கு மேல் பல லட்சம் மக்களை பாதித்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்து வருகிறது.
இதில் ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
சீனாவை விட அமெரிக்கா பாதிப்பு எண்ணிக்கையில் மிஞ்சியது, சீனாவைவிட இத்தாலி இறப்பு எண்ணிக்கையில் மிஞ்சியது.
இதைக் கட்டுக்குள் கொண்டுவர பல அரசாங்கம் திணறி வரும் இவ்வேளையில் மிகப்பெரும் தலைவர்களையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.
கனடா பிரதமரின் மனைவி, ஈரானின் துணை அதிபர், பிரிட்டன் இளவரசர், பிரிட்டன் பிரதமர் போன்றவர்களை இந்த தொட்டு விட்டு வைக்கவில்லை.
தற்போது பிரிட்டனில் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த நாட்டில் இளவரசர், பிரதமர் சுகாதாரத்துறை அமைச்சர் என அடுத்தடுத்து இந்த தொட்டு பரவி உள்ளது.
இது அந்த நாட்டு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டன் அரசு ஆறுமாதம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது