கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்(Boris Johnson).
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகெங்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதித்து பல்லாயிரம் மக்களை பழி தீர்த்து வருகிறது.
இந்த வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி உள்ளனர்.
பலி எண்ணிக்கை யில் இந்த நாடுகள் அதிக இழப்புகளை சந்தித்து வருகிறது.
இந்த வைரஸ் கன்னட பிரதமரின் மனைவி, பிரிட்டன் இளவரசர், ஸ்பெயின் இளவரசி, பிரிட்டன் பிரதமர், பிரிட்டனின் சுகாதாரத்துறை அமைச்சர் போன்றவர்களை கூட விட்டு வைக்கவில்லை.
கடந்த மாதம் பிரிட்டன் பிரதமருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டு. தன்னைத்தானே தன் சொந்த வீட்டில் தனிமை படித்துக் கொண்டிருந்தார்.
ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு முன்பு இந்த வைரஸ் தாக்கம் அதிகமானதால் இங்கிலாந்து பிரதமரை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த அடுத்த மூன்று நாளில் அவரது உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது என்று ரைட்டர்ஸ் செய்திகளில் வெளியானது.
சிறந்த அனுபவம் மிக்க மருத்துவ குழுவால் போரிஸ் ஜான்சனை கண்காணித்து வந்தார்கள்.
போரிஸ் ஜான்சன் அன்று சுய நினைவுடன் இருக்கிறார் என்றும் ஒருவேளை மயக்கம் அடைந்தால் அவருக்கு பதிலாக வெளியுறவுதுறை செயலர் டோமினிக் ராப் பிரதமரின் அலுவலக பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று டோமினிக் ராப் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரவை கூட்டம் நடந்தது.
தற்போது பிரிட்டன் மக்களுக்கு மட்டும் இல்லாமல் உலக மக்களுக்கும் சந்தோஷப்படும் அளவிற்கு பிரிட்டன் பிரதமர் வைரஸில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.
அவர் வீடு திரும்பியதும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதற்கு நன்றி தெரிவித்து அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
ஆனால் அவர் முற்றிலும் குணமடைந்து என்பது இன்னும் தெரியவில்லை. அவர் இருந்தாலும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்