மூன்று நாட்களுக்கு பிறகு வேலையை காட்டிய கொரோனா; சீனா கதறல்
சீனாவில் கடந்த மூன்று நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. நான்காம் நாளில் புதிதாக ஒரு நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 46 நபர்களில் 45பேர் வெளிநாட்டில் இருந்து வந்தோர். ஒருவர் மட்டும் அந்த நாட்டில் இருந்தவர்.
மீண்டும் கொரோனா தொற்று வந்ததால் சீனா மக்கள் மீண்டும் பீதி அடைந்தனர்.
நாடு முழுதும், நேற்று முன்தினம் வரை, கொரோனாவால், 81 ஆயிரத்து, 54 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில், 3,261 பேர் இறந்த நிலையில், 5,549 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
சிகிச்சைக்கு பின், 72 ஆயிரத்து, 244 பேர் வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை, 1,845 ஆக குறைந்துள்ளது.