ஆசியாவில் கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தை தொட்டது. சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தான் அதிகம் பாதித்து வருகிறது.
இதில் அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஆசியாவில் இதுவரை 3.95 பேருக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர்.
ஆசியாவில் புதிதாக 12,500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 319 பேர் பலியாகினர். இதனால் மொத்த பாதிப்பு 3,95,657 ஆகவும், மொத்த பலி 15,105 ஆகவும் அதிகரித்தது.
ஆசியாவில் அதிக பாதிப்புகளை துருக்கி (90,980), இரான் (83,505), சீனா(82,747) ஆகிய நாடுகள் சந்தித்துள்ளன. இந்தியாவில் பாதிப்பு 18,539 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் 8,418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 592 பேர் மற்றும் பாகிஸ்தானில் 176 பேர் உயிரழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.