
வடகொரியா கொரோனா; உண்மையை மறைக்கிறாரா கிம் ஜாங்க் உன், வடகொரியா நாட்டில் கொரோனா பரவுவதை மறைக்கும் கிம் ஜாங்க் உன்.
வடகொரியாவில் கொரோனா பரவுவதை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்க் உன் மறைப்பதாக ஊடங்கங்கள் சந்தேகிக்கின்றன.
கொரோனா தொற்று வந்த ஒருவரையும் சுட்டு கொன்றதாக கூறப்படுகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தொற்றினால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர்.
அந்த தருணங்களிலும் வேண்டிய மருத்துவ உதவிகளும் உபகரணங்களும் வழங்காமல் வெறும் தெர்மோமீட்டர் கொண்டு பரிசோதித்ததாக அந்நாட்டு மருத்துவர் சொய் ஜுங் ஹுன் தெரிவித்துள்ளார்.
தற்போது கூட, வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், அதை, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், மறைத்து வருவதாகவும், அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
வட கொரியாவில், 24 லட்சம் பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என, சர்வதேச மருத்துவ நிபுணர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.