கொரோனாவிற்கு அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களே என்று அண்மையில் வெளிவந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் தான்.
சீனா: கொரோனா தொற்றின் அபாயம் என்பது ஆண்கள், பெண்கள் இருபாலருக்குமே பொதுவானது என்றாலும், ஆண்கள் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு இறுதியில் இறக்க நேரிடுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் வயது முதிர்ந்த, கொரோனா பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு அதிக கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.
கொரோனாவின் வீரியம் முதியவர்கள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே அதிகம் இருக்கும், இறப்பிற்க்கான சாத்தியமும் இவர்களுக்கு அதிகம் என்று இதுவரை ஆய்வுகள் எச்சரித்தன.
ஆராய்ச்சிகளின் தொடக்கம்
சீனாவில் உள்ள பெய்ஜிங் டோங்கிரின் பணிபுரியும் ஆராச்சியாளர், ஜின்-குய் யாங் உட்பட மற்ற ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 நோயால் இறந்த நோயாளிகளின் கணக்கை ஆராய்ந்தனர்.
பின்னர், “ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனாவால் இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதை நாங்கள் கவனித்தோம்” என்று யாங் தெரிவித்தார்.
“பெண்களை விட ஆண்களுக்கு நோய் தொற்றும் அபாயம் அதிகமா? என்ற கேள்வி எங்களுக்கு தோன்றியது. ஆனால் இதற்கான விளக்கம் இதுவரை எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இதனால், இதற்கான தீர்வை கண்டறியும் முயற்சியில் இறங்கினோம்”. என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இதுவரை இதற்கான தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை.
ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், ஒரு சிலரை விட மற்றவர்கள் இந்த வைரசினால் ஏன் அதிகமாக பாத்திப்படைகிறார்கள் என்பது தெளிவாக விளங்கவில்லை என்றே கூறுகின்றனர்.
நோயின் தீவிரம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை யாங் மற்றும் அவரது குழுவினர், கொரோனா நோயாளிகளிடையே ஆராய்ச்சி செய்து பார்த்தனர்.
மருத்துவர்கள் தாங்கள் சிகிச்சையளித்த 43 நோயாளிகளின் விவரங்களும், 1056 COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவரங்களும் இதில் அடங்கும்.
சார்ஸ் மற்றும் கோவிட்
COVID-19-க்கு காரணமான வைரஸ் 2003-ல் பரவிய சார்ஸ் நோயின் பின்னணியில் உள்ள வைரஸை ஒத்தது. இந்த இரண்டு வகை வைரஸ்களிலும் ACE2 எனப்படும் புரதம் பொதுவானதாக உள்ளது.
இந்த வைரஸ்கள் உயிரணுக்களில் இணைவதற்கு இந்த புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், மருத்துவர்கள் 2003-ல் பதிவான 524 SARS நோயாளிகளின் விவரங்களை ஆய்வு செய்தனர்.
சார்ஸ் நோய் தொற்றின் போதும் அதிகம் பாதிக்கப்பட்டது ஆண்கள் தான். இருப்பினும் கோவிட்-19 பொறுத்தவரையில் வயது மற்றும் தொற்று என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது.
ஆண்களுக்கு ஆபத்து அதிகம்
ஆனால் நோயின் தீவிரம் பெண்களை விட ஆண்களில் அதிகம் உள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 70% பேர் ஆண்கள். இது பெண்களை விட 2.5 மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.
யாங் மற்றும் அவரது குழுவினர் இதற்கான காரணத்தை தெளிவுபடுத்துகையில், சார்ஸ் மற்றும் கோவிட்-19 இரண்டிலுமே காணப்படும் ACE2 எனப்படும் புரதம், ஆண்களின் உடலில் அதிகமாக இருக்கிறது.
இதனால் நோய் தொற்றிற்கு ஆளானவர்களில் ஆண்கள், இருதய நோய் தொடர்பான நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.
முதற்கட்ட முடிவு
இது ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவு மட்டுமே. இதில் இன்னும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இருப்பினும் இந்த முடிவுகளை முதல்நிலை ஆராய்ச்சி முடிவுகளாக கொண்டு செயல்படுத்தலாம்.
ஆண் நோயாளிகளுக்கு அதிக கவனம் தேவை :
இந்த ஆரம்ப கட்ட முடிவுகள் ஆண் நோயாளிகளுக்கு ஆபத்து அதிகம் என்பதையே உணர்த்துகின்றன. எனவே வயது முதிர்ந்த ஆண் நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் தேவை” என்று யாங் தெரிவித்துள்ளார்.