கொரோனா மனிதர்களால் உருவாக்கப்படவில்லை அமெரிக்கா தகவல். கொரோனா வைரஸின் உருவாக்கம் பற்றி அமெரிக்கா ஆய்வுகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
அமெரிக்கா: கொரோனா எனப்படும் கோவிட் – முதன்முதலில் சீனாவில் உள்ள வுஹானில் இருந்துதான் முதலில் பரவத்துவங்கியது. இந்த ஆட்கொல்லி வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி உயிர் சேதத்தை ஏற்படுத்தியது.
பின்னர் இத்தாலி அமெரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் பரவி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து மீள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அனைத்து உலக நாடுகளும் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே கொரோனா சீனாவால் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ஒரு கட்டத்தில் சீனாவில் மட்டும் வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம்.
மேலும் “இந்த வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனாவுடன் உலக சுகாதார மையமும் ஆரம்பத்தில் பல விஷயங்களை மூடி மறைத்ததாலேயே இன்று உலகம் இத்தகைய பேரிடரை சந்தித்து வருகிறது.
முன்னரே இந்த வைரஸ் குறித்து உண்மை தகவல்களை சீனா அறிவிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். அமெரிக்காவும் இந்த வைரஸ் பற்றிய ஆய்வுகளை நடத்திக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தற்போதைய ஆய்வு முடிவு ஒன்றில் கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்படவோ அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டதோ இல்லை என உறுதியாகி உள்ளது.
இருப்பினும் இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியதா இல்லை வுஹானில் ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட விபத்தால் பரவியதா தெரியவில்லை.
இதைப்பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகள் வந்த பிறகு அறிவிக்கப்படும் என்று அமெரிக்க உளவியல் துறை அறிவித்துள்ளது. இந்த வைரஸ் இயற்கையாக வெளவால்களிடமிருந்து பரவியதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆராய்ச்சியாளர் பம்பியோ, இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்பதைத் துல்லியமாக தீர்மானிக்க ஆய்வாளர்களை சீனாவிற்குள் அனுமத்திக்க வேண்டும் என்று கூறினார். இதற்க்கு சீனா ஒப்புக்கொள்ளவில்லை.
பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் 2018-இல் வுஹானில் உள்ள ஆய்வகத்தில் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து தெரிவித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், வைரஸ் அங்கு தோன்றியதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. “கொரோனா வைரஸ் வுஹானில் ஆய்வுகூடத்திலிருந்து பரப்பப்படவில்லை.
நோய் கிருமிகள் வெளியேறா வண்ணம் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் தான் இந்த ஆய்வுக்கூடம் இயங்கி வருகிறது. இதனால் ஆய்வுகூடத்திலிருந்து வைரஸ் பரவவில்லை.
வைரஸின் தோற்றம் ஒரு சிக்கலான விஞ்ஞான பிரச்சினை என்பதை நான் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இதனை விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் ஏற்கனவே கூறியிருந்தார்.