Home Latest News Tamil கனடா பிரதமர் மனைவியா இவங்க? அதிர்ச்சியடைந்த உலகம்

கனடா பிரதமர் மனைவியா இவங்க? அதிர்ச்சியடைந்த உலகம்

14399
0

கொரோனா நோய் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் கனடா பிரதமர் மனைவி என கூறி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார் அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அனால் அவர் உண்மையில் கனடா பிரதமர் மனைவியா என்பதை பற்றிய பேக்ட் செக் செய்தி தான் இது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய கனடா பிரதமர், தனது மனைவியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறியிருந்தார் .

ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது குழந்தைகளும் லண்டனிலிருந்து திரும்பிய பின்னர், மார்ச் 12 அன்று இவர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் பிறகு ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இவரது குழந்தைகளுக்கும் தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.

காணொளியில் வந்த பெண் பிரதமரின் மனைவியா?

காணொளியில் உண்மையில் பேசுபவர் யார் என்ற சோதனை நடந்தது. அந்த பெண் பேசும்பொழுது பயங்கரமாக இருமுகிறார்.

அவரைச் சுற்றி மருத்துவ உபகரணங்கள் உள்ளன. அவை இல்லாவிட்டால் சரியாக மூச்சு விட இயலாது என கூறுகிறார். வைரஸின் தாக்கம் குறித்து அனைவரையும் எச்சரிக்கிறார்.

அந்த வீடியோவில் இருக்கும் பெண் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 39 வயதான தாரா ஜேன் லாங்ஸ்டன். லண்டனில் உள்ள ஹில்லிங்டன் மருத்துவமனையில் உள்ளார்.

அவர் வீடியோ செய்து பரப்பியது இப்பொழுது தவறான பெயரில் பரவி வருகிறது. வீடியோவில் பெயரை மாற்றி விஷமிகள் பரப்பி உள்ளனர்.

Previous articleகனிகா கபூர் முதல் குடியரசு தலைவர் வரை – கொரோனா பரவிய வரைபடம்
Next articleசரியான நேரத்தில் சரியான வீடியோ வெளியிட்ட சுஹாஷினி!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here