Home நிகழ்வுகள் உலகம் கொரோனா தொற்று அமெரிக்காவில் உச்சகட்டம் 50,000க்கும் மேற்பட்டோர் பலி

கொரோனா தொற்று அமெரிக்காவில் உச்சகட்டம் 50,000க்கும் மேற்பட்டோர் பலி

275
0
அமெரிக்காவில் உச்சகட்டம்

வாசிங்டன்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சாவு எண்ணிக்கை அமெரிக்காவில் உச்சகட்டம் 50,000த்தை கடந்தது, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம்.

வெள்ளிகிழமை மட்டும் 24 மணி நேரத்தில் 3,176 பேர் இந்த நோயால் அமெரிக்காவில் இறந்துள்ளனர் என பல்கலைகழகம் தெரிவித்தது.

சீனாவின் வுகான் நகரத்தில் துவங்கி உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா உலகில் எங்கும் இல்லாத அளவில் அமெரிக்காவில் அதிக உயிர்பலிகளை வாங்கியுள்ளது.

உலக அளவில் 2.7 மில்லியனை தொட்டது கொரோனா

உலக அளவில் 2.7 மில்லியன் மக்களையும் தாண்டி இந்நோய் பரவி வருகிறது, மேலும் இந்நோயால் 192,000 பேர் உலக அளவில் இறந்துள்ளனர் என பல்கலைகழகம் தெரிவித்தது.

அமெரிக்காவில் உச்சகட்டம்

தற்போது வரை அமெரிக்காவில் 8,69,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 50,031 மக்கள் இறந்துள்ளனர்.

அமெரிக்காவில் 95% மக்கள் வீட்டுக்குள் அரசு உத்தரவுபடி முடக்கப்பட்டு உள்ளனர் மேலும் சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது இது மே மாதம் 1 ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here